எலான் மஸ்க் மீண்டும் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் சமூகத்தை முற்றிலும் மாற்றிவிடும், அந்த மாற்றத்தால் மக்கள் “வேலை செய்யவே வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினார்..
மேலும் “இன்னும் 20 ஆண்டுகளுக்குள்… நான் சொல்ல வேண்டுமன்றால், 20 ஆண்டுகளில் வேலை என்பது ஒரு விருப்பமாக இருக்கும்.. வேலை செய்வது ஒரு பொழுதுபோக்குபோல ஆகிவிடும். மேலும், AI மற்றும் ரோபோட்டிக்ஸ் வேகமாக வளர்வதால், இந்த மாற்றம் 10–15 ஆண்டுகளுக்குள்ளும் நிகழலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தனது துணிச்சலான இந்த கணிப்பு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “வெளிப்படையாக, மக்கள் இதை 20 ஆண்டுகளில் மீண்டும் நினைவுபடுத்தி, ‘பாருங்கள், எலான் இந்த அபத்தமான கணிப்பை செய்தார், அது உண்மையல்ல’ என்று கூறலாம், ஆனாலும், நான் சொல்வது நிஜமாகவும் நடக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
அவர் எதிர்கால வேலையை, வீட்டில் காய்கறி வளர்ப்பதைப் போல ஒப்பிட்டார்.. “நீங்கள் விரும்பினால் வீட்டில் காய்கறி வளர்க்கலாம்; இல்லையெனில் கடையில் வாங்கிக் கொள்ளலாம். வேலை செய்வதும் அதுபோல விருப்பமான ஒன்றாகிவிடும்” என்றும் தெரிவித்தார்.
எலான் மஸ்க், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் திறன்களைப் பற்றி மிகுந்த நம்பிக்கை வெளியிட்டார். இதுகுறித்து பேசிய அவர் “AI மற்றும் ரோபோட்டிக்ஸ் தொடர்ந்து வளர்ந்தால், வேலை செய்வது விருப்பமான ஒன்றாகிவிடும். மக்கள் விரும்பும் எந்த பொருளையும், எந்தச் சேவையையும் பெற முடியும்.”
எதிர்கால உலகம் “நீங்கள் நினைத்ததெல்லாம் கிடைக்கும்” என்ற நிலைக்கு செல்லக்கூடும் என்றும் அவர் கூறினார். மேலும் மனிதர்களை மகிழ்விக்க செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் முடிந்து, ஒரு கட்டத்தில் இயந்திரங்களுக்கு மனித மகிழ்ச்சிக்காக செய்ய வேலைகள் தீர்ந்து போகலாம். ஒரு கட்டத்தில், மனிதர்கள் நினைக்கக்கூடிய எல்லாவற்றையும் AI பூர்த்தி செய்துவிடும் அளவிற்கு அது நிறைவடையும்,” என்று தெரிவித்தார்.
எலான் மஸ்க், இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது இது முதன்முறையல்ல.. முன்பு நவம்பர் 19-ஆம் தேதி அமெரிக்கா–சவுதி முதலீட்டு மன்றத்தில் கூறிய கருத்துகளையும் நினைவுபடுத்தினார்.
அப்போது ” AI மற்றும் ரோபோக்கள் வேலைச்செய்வதை விருப்பமானதாக மாற்றிவிடும். பணத்தின் தேவையை குறைத்து, அதை “அற்பமானதாக” மாற்றும்.. வறுமையை முற்றிலும் நீக்கிவிடும்.. AI மற்றும் மனித வடிவ ரோபோக்கள் (humanoid robots) உண்மையில் வறுமையை நீக்கிவிடும். மேம்பட்ட கணினி அமைப்புகள் அனைவரையும் செல்வந்தர்களாக்கும்.” என்று கூறியிருந்தார்..
தற்போது மீண்டும் எலான் மஸ்க் இதே போன்று கருத்து தெரிவித்துள்ளார்.. எதிர்காலத்தில் பணம் தேவையற்ற ஒன்றாக மாறக்கூடும் என்று அவர் கூறினார். “அனைவருக்கும் அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெற முடியும் என்ற எதிர்காலத்தில், வேலை பகிர்மானத்துக்கான (labour allocation) அடிப்படை தரவுத்தளமாகப் பணம் தேவைப்படாது.. அத்தகைய உலகில் “பவர் ஜெனரேஷன்” (மின்சார உற்பத்தி / ஆற்றல் உருவாக்கும் திறன்) புதிய நாணய வடிவமாக மாறக்கூடும்.” என்று தெரிவித்தார்..
Read More : தன் மகனுக்கு ’சேகர்’ என தமிழ் பெயரிட்ட எலான் மஸ்க்..! ஏன் தெரியுமா? அவரே சொன்ன விளக்கம்!



