சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தீய சக்தி திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.. அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.. நாட்டு மக்களை தான் ஜெயலலிதா தனது வாரிசாக பார்த்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டனர்..
எனது தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்து திமுகவால் விமர்சனம் செய்ய இயலவில்லை.. ஆட்சியில் எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு பொற்கால ஆட்சியை கொடுத்தது அதிமுக. சட்டமன்றத்தில் எனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் திமுகவினர் அராஜகம் செய்தனர்.
2021 தேர்தலில் சூழ்ச்சியால் தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது.. மீண்டும் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி கொடுக்க இங்கிருக்கும் அனைவரும் உதவ வேண்டும்.. 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.. அனைத்து தேர்தல்களிலும் களப்பணி ஆற்றியவர்கள் இங்கே இருக்கிறீர்கள்.. நடைபெற உள்ள தேர்தலில் 100% வெற்றி உறுதி.. அதிமுக வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.. 2011 முதல் 2021 வரை அதிமுக பொற்கால ஆட்சியை கொடுத்தது அதிமுக.. 1992-ல் திமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே பெற்றது.. 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசை திமுக நடத்திக் கொண்டிருந்தது..
2011 தேர்தலில் கலைஞர் இருந்தத போது, திமுகவால் எதிர்க்கட்சி இடத்தில் கூட அமர முடியவில்லை.. 2016 தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார்.. இப்படிப்பட்ட கட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சிப்பது கேலிக்கூத்தாக உள்ளது.. 9 சட்டமன்ற தேர்தல்களில் திமுகவை அதிமுகவை வீழ்த்தியது.. இதுதான் நிலைமை.. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.. ஆனால் அந்த தேர்தலில் 1 முதல் 2 சதவீத வாக்குகள் தான் திமுகவை விட குறைவாக பெற்றோம்.. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக சேர்ந்து பெற்ற வாக்குகள் 41.33%. 2026 சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெல்லும்..” என்று தெரிவித்தார்.
Read More : ”லிஸ்ட் ரெடி.. இன்னும் 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் உள்ளே போவார்கள்..” இபிஎஸ் ஆவேசம்..!



