சேலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் சாலை விரிவாகம் தொடர்பாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனனுக்கு சொந்தமாக நிலம் இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யாமல், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது..
இதனால் பொதுமக்களுக்கும் அர்ஜூனனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. அப்போது ஆத்திரமடைந்த அர்ஜூனன் பெண் ஒருவரை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.. மேலும் கட்டை ஒன்றை எடுத்து வந்து அந்த பெண்ணை அவர் தாக்க முயன்றார்.. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
1989-ல் திமுக ஜெ அணியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர் அர்ஜூனன். தாரமங்கலம் தொகுதியில் 1989 முதல் 1991 வரை சட்டமன்ற உறுப்பினராக அர்ஜூனன் இருந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடியில் ஊழியர்களை தாக்கியது தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. இந்த தகராறை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..



