NDA கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை..! 4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதியாகும்.. அமித்ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி..!

Edappadi Palanisamy EPS 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என மும்முரமாக பணியாற்றி வருகின்றன.. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது..


இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக நேற்று டெல்லி சென்றார்.. நேற்றிரவு அமித்ஷாவை சந்தித்த இபிஸ், தமிழக அரசியல் நிலைமை, கூட்டணி அமைப்பு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.. அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக நீடிக்கும் இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது..

இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், தொகுதி பங்கீடு இன்னும் 4 நாட்களில் நிறைவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ தேர்தல் வேலைகள் இருப்பதால் அமித்ஷாவை பார்க்க வந்தேன்.. அவருடன் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசினேன்.. 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது.. எனவே நான் வந்து அவரை பார்த்துள்ளேன்..

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.. எங்களை பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை.. கூட்டணியில் சேர வேண்டிய கட்சிகள் சேர்ந்துள்ளது.. தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. இதை அவர்களும் சொல்லி விட்டனர்.. இன்னும் 4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.. எந்த கட்சிகளுக்கு எங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அந்தந்த இடங்கள் ஒதுக்கப்படும்.. ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்..

அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்திருக்கிறோம்.. மத்திய அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை பெற்று நிறைவேற்றி இருக்கிறோம்.. திமுகவின் இந்த 5 ஆண்டு காலத்தில் எந்த புதிய பெரிய திட்டமும் இல்லை.. சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது.. தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை என நடைபெறாத நாளே இல்லை..” என்று தெரிவித்தார்..

Read More : Flash : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை..! நேற்று ரூ.5,360 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு.!

RUPA

Next Post

Breaking : 9 வான்வெளிகளைத் தவிர்க்கவும், அவசரகாலத் திட்டங்களை உறுதி செய்யவும்.. விமான நிறுவனங்களுக்கு DGCA உத்தரவு..!

Fri Mar 20 , 2026
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அன்று, பாதுகாப்பு இடர் மதிப்பீடுகளின் ஒரு பகுதியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சில வான்வெளிகளைத் தவிர்க்கவும், வலுவான மாற்றுத் திட்டங்களை உறுதி செய்யவும் விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. பஹ்ரைன், ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றின் வான்வெளிகளைத் தவிர்க்குமாறு DGCA விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. […]
aeroplane flight plane

You May Like