கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏவாகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.. கடந்த 2005-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
பெரியபாளையம் அருகே தானாகுளத்தில் உள்ள அவரின் வீட்டின் கதவை உடைத்து எம்.எல்.ஏ சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரின் மனைவி மகன்களை தாக்கி அவரின் வீட்டில் இருந்து 62 சவரன் நகைகளை பவாரியா கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்..
இதையடுத்து துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இதையடுத்து கொலையாளிகளை சுட்டுப் பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.. கொடூர குற்றவாளிகளை பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திலேயே இந்த வழக்கில் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் ராஜஸ்தானில் நடந்த என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்..
இந்த நிலையில் பவாரியா கொள்ளையர்களால் எம்.எல்.ஏ சுதர்சன கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமீனில் தலைமறைவான நிலையில் இருவர் சிறையிலேயே உயிரிழந்தனர்.. எஞ்சிய 4 பேருக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. மீதமுள்ள ஒருவர் மீதான விவரம் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 24-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..



