தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. 2-ம் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.. கரூர் கூட்ட நெரிசல், கிட்னி முறைகேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அணிந்து வந்துள்ளனர்.. கிட்னி முறைகேடு குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.. அதே போல் கரூர் சம்பவத்திற்கு அரசின் தோல்வியே காரணம் என்று கூறி வருகிறது.. இந்த சூழலில் தமிழக அரசை கண்டிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்..