மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் இன்பதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், அதிமுகவின் தேசிய அரசியலில் உள்ள பங்கிற்கு கூடுதல் வலிமையை வழங்குவதாகக் கருதப்படுகிறது.
யார் இந்த இன்பதுரை? வழக்கறிஞராக பணியாற்றி வந்த இன்பதுரை, கடந்த ஜூலை மாதம் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். மிகக் குறுகிய காலத்திலேயே, தற்போது அவருக்கு மத்திய கல்வி அமைச்சக ஆலோசனைக் குழுவில் இடம் கிடைத்துள்ளது.
இந்த ஆலோசனைக் குழுவில் இருப்பதன் மூலம், மத்திய கல்விக் கொள்கைகள் குறித்து கருத்துகள் பரிமாறலாம், புதிய திட்டங்களுக்கு பரிந்துரைகள் செய்யலாம், கல்வி வளர்ச்சிக்கான சிந்தனைகளை நேரடியாக முன்வைக்கலாம். இதனால், இன்பதுரைக்கு தேசிய அளவில் கல்விக் கொள்கை வடிவமைப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்பதுரையின் நியமனம், அதிமுகவின் என்.டி.ஏ கூட்டணியில் நிலையை வலுப்படுத்தும். மேலும், மத்திய அரசின் கல்வித் துறையில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுக முக்கிய கூட்டாளியாக உள்ளது. இன்பதுரை போன்ற தலைவர்கள் மத்திய அரசில் பொறுப்புகளைப் பெறுவது, அந்த கட்சியின் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது.
Read more: உஷார்.. இவர்களெல்லாம் உணவில் வெங்காயம் சேர்க்க கூடாது.. சைடு எஃபெக்ட் அதிகமாக இருக்கும்..!!