திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.
திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது..
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசை கடுமையாக சாடியது.. இதுகுறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை மாவட்ட நீதிபதி இந்த வழக்கை நேரடியாக விசாரிப்பார் என்றும் உத்தரவிட்டது. அதன்படி மதுரை மாவட்ட நீதிபதி இன்று தனது விசாரணையை தொடங்கினார்.
இதனிடையே உயிரிழந்த அஜித்தின் குடும்பத்தினரை சந்தித்து அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் அஜித்குமாரிடன் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் அரசின் அனைத்து நிவாணங்களையும் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், அஜித்குமாரின் சகோதரருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குவதாகவும் உறுதியளித்தார். அந்த வகையில் உயிரிழந்த அஜித்குமார் தம்பி நவீன் குமாருக்கு அரசுப்பணி நியமன ஆணையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். மேலும் அஜித்தின் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டாவும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார். தொலைபேசி வாயிலாக உரையாடிய அவர் “ எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. தாய் தனது மகனை இழப்பது கொடுமையான விஷயம்.. அதை யாராலும் மன்னிக்க முடியாது.. பெற்ற தாய்க்கு மட்டுமே அந்த வலி தெரியும்.. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் ஈடாகாது.. மனம் தளராமல் தைரியமாக இருங்க.. அதிமுக உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீதிமன்றத்திலும் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கோம்.. நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்படும்.. எனது ஆழந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அஜித்தின் சகோதரரிடம் பேசிய அவர் “ இந்த நிகழ்வு மீள முடியாதது.. ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. உங்கள் அண்ணன் இறப்புக்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்கள் தண்டிக்கப்படும் வரை அதிமுக துணை நிற்கும்.. தைரியமா இருங்க.. என்று ஆறுதல் தெரிவித்தார்.
Read More : உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் பெரிய கருப்பன்..!