சியா விதைகள் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்..? – AIIMS நிபுணர் விளக்கம்..

chia seed water for weight loss 624x312 1

உலகளவில் சுகாதார உணர்வுள்ள உணவுகளில் சியா விதைகள் (Chia Seeds) தற்போது ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளன. எய்ம்ஸ், ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை-குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேதி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் சியா விதைகள் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் என்பதை விளக்கியுள்ளார்.


டாக்டர் சௌரப் சேதியின் கூற்றுப்படி, சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம், கால்சியம், மெக்னீசியம், மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. அவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கான சக்தி மையம். வெறும் இரண்டு தேக்கரண்டி சியா விதைகளில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒருவரின் தினசரி தேவையின் 30–40% ஆகும். இந்த நார்ச்சத்து குடல் பாக்டீரியாவை ஊட்டுகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது.

சியா விதைகள் தங்களது எடையை விட 12 மடங்கு தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற தன்மையை பெறும். இதனால் செரிமானம் மெதுவாகும், வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு தரும், இரத்த சர்க்கரை நிலை சீராக இருக்கும். வழக்கமான நுகர்வு இதய ஆரோக்கியத்தையும் கொழுப்பு அளவையும் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

சாப்பிடும் சிறந்த முறை: இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை தண்ணீர், பால் அல்லது தயிரில் இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிடுங்கள், என டாக்டர் சௌரப் சேதி பரிந்துரைக்கிறார். அதிலும் தயிரில் ஊறவைத்தல் சிறந்தது. ஊறவைப்பது ஜீரணத்தை எளிதாக்கும், மூச்சுத் திணறல் அபாயத்தையும் குறைக்கும். ஆனால் IBS (எரிச்சல் குடல் நோய்க்குறி) உள்ளவர்கள் சிறிய அளவில் தொடங்கிக் கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கிறார்.

13.6 கிலோ எடைக் குறைந்த அனுபவம்: சமூக ஊடகங்களில் மருத்துவ ஆதாரங்களுடன் ஆரோக்கியக் குறிப்புகளைப் பகிரும் டாக்டர் செளரப் சேதி, தன் வாழ்க்கை மாற்றத்தையும் பகிர்ந்துள்ளார். “நான் பல வருடங்கள் பல்வேறு உணவுமுறைகள், கடுமையான உடற்பயிற்சிகள் முயற்சி செய்தேன். ஆனால் உண்மையான மாற்றம் என் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திய பிறகே ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.

இதனால் அவர் 30 பவுண்டு (13.6 கிலோ) எடையைக் குறைத்தார், கொழுப்பு கல்லீரலை மாற்றினார், நீரிழிவு முன்நிலையிலிருந்து மீண்டார், நல்ல தூக்கம், ஆற்றல் மற்றும் கவனம் பெற்றார். “உங்கள் உடல்நலத்தின் மையம் குடல் தான். சியா விதைகள் போன்ற சிறிய, ஆனால் சீரான பழக்கவழக்கங்கள் நீண்டகால நன்மைகளை தரும்,” என டாக்டர் சேதி வலியுறுத்துகிறார்.

குறிப்பு: மேற்கண்டவை மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தகவல்கள். உடல் நலம் தொடர்பான எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read more: 2050-க்குள் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 3 கோடியாக உயரும்!. 10.8 மில்லியன் இறப்புகள் ஏற்படும்!. ஆய்வில் அதிர்ச்சி!

English Summary

AIIMS-trained doctor explains what happens when you eat chia seeds for 14 days straight

Next Post

சூப்பர் வாய்ப்பு...! மாணவர்களுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை...! விண்ணப்பிக்க கால அவகாசம்...!

Fri Oct 10 , 2025
பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் […]
money e1749025602177

You May Like