கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் நாளை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திருப்புவனத்தில் போராட்டம் நடத்த முதலில் அனுமதி கேட்டோம்.. அனுமதி கொடுத்துவிட்டனர்.. நாளை ஆர்ப்பாட்டம் என்று உறுதி செய்த பின்னர், நள்ளிரவில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதுவரை நடந்த எல்லா போராட்டத்திற்கும் நாங்கள் அனுமதி தான் தான் கேட்கிறோம்.. பாதுகாப்பு தேவையில்லை.. எங்கள் சொந்த நாட்டில் போராட்டம் நடத்த எங்களுக்கு எதற்கு பாதுகாப்பு..
நீங்கள் வந்தால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறுகிறார்கள்.. அனுமதி மறுத்தாலும் ஒன்றும் இல்லை.. நீங்கள் மறுத்துகிட்டு இருங்க.. நான் தடையை மீறி போராட்டம் நடத்துவேன்.. நீங்கள் வழக்கை போடுங்கள்.. சிறையில் வையுங்கள்.. அதை பற்றி எனக்கு கவலை இல்லை.. காட்டாற்று வெள்ளத்தை கற்கள் போட்டு தடுக்க முடியுமா? நாளை அறிவித்த படி ஆர்ப்பாட்டம் நடக்கும்..” என்று தெரிவித்தார்..
மேலும் “ புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஒருநாள் தானே தங்கள் வரலாற்றை எழுதுவார்கள் என்று அம்பேத்கர் கூறியுள்ளார். அந்த வரலாற்றை நாங்கள் எழுதி வருகிறோம்.. சாதி ஒழிப்பு, சமூக நீதி எல்லாம் 60 ஆண்டுகளாக வெறும் வெற்று சொல்லாடலாகவே இருக்கிறது.. சாதி வாரி கணக்கெடுப்பை நீண்ட காலமே வலியுறுத்தி வருகிறோம்.. சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க என்ன பிரச்சனை? ஒரே வீட்டினுள் இரண்டு முதலமைச்சர் இருக்கின்றனர்.. ஒருவர் துணை முதல்வர், ஒருவர் முதலமைச்சர்.. நீங்கள் என்ன சமூக நீதியை பற்றி பேசுகிறீர்கள்..” என்று தெரிவித்தார்.
Read More : “அவல நிலையில் மாணவர் விடுதிகள்.. பெயரை மாற்றி விளையாட்டு காட்டும் ஸ்டாலின்..” அண்ணாமலை சாடல்..