திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளிதழ் செய்தி அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித். நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது..
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட நீதிபதி நேற்று தனது விசாரணையை தொடங்கி உள்ளார். இந்த வழக்கிற்கு திடீர் திருப்பமாக மூலக்காரணமாக இருந்த நிகிதா மீது மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக 2011-ம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்ப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பணம் பெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மீண்டும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்து வருகின்றனர்.
மதுரை திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு, நிகிதா தனது தாயுடன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 25 லட்சம் வரை மோசடி செய்துள்ள நிகிதாவை பிடித்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்..
Read More : நிகிதா ரூ.25 லட்சம் மோசடி செய்தது அம்பலம்.. அஜித் மரண வழக்கில் எழும் பல கேள்விகள்.. ஆனால் பதில்..?