குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு பின் அஜித் நடிக்க உள்ள ஏகே 64 படம் பற்றிய அப்டேட்டுகளும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றியபோது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் ஒர்க்கிங் ஸ்டைல் அஜித்துக்கு பிடித்துப் போக, அவருக்கே தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ஏகே 64 படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை பிரபல விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அங்கு தான் ஒரு செம ட்விஸ்ட் நடந்துள்ளது. ராகுல் அஜித்திடம் ஒரு செம டீல் போட்டிருக்கிறாராம். அதன்படி இப்படத்தில் நடிக்க அஜித்துக்கு சம்பளம் தராமல், இதன் ஓடிடி மற்றும் டிஜிட்டர் உரிமையை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகை முழுவதையும் அஜித்துக்கே வழங்க முடிவெடுத்துள்ளாராம். ராகுல் தியேட்டர் மூலம் கிடைக்கும் வருமானத்தை எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
ஆனால் இது எந்தளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. அஜித் இதற்கு முன்பு இதுபோல வேறெந்த படத்திற்கும் செய்தது இல்லையாம். ஒரு சில படங்களுக்கு அஜித் ஹிந்தி போன்ற பிற மொழி ரைட்ஸை சம்பளமாக வாங்கியிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த சமயத்தில் அஜித் AK64 படத்திற்காக போட்ட டீலிங்கை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தினரும் அசந்துபோயிருக்கின்றனர்.
Read more: ரஷ்யா நிலநடுக்கம் எதிரொலி.. சுனாமி ஆபத்தில் உள்ள நாடுகள், தீவுகள்.. முழு லிஸ்ட் இதோ..