அஜித் குமார் கொலை வழக்கில், புகாரளித்த பேராசிரியை நிகிதா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் நடந்து வருகிறது..
இதனிடையே நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக 2011-ம் ஆண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியது. உண்மையிலேயே நகை திருட்டுப் போனதா? என்பதும் அவரை விசாரித்தால் தான் தெரியவரும்.. இதனால் நிகிதாவை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இன்று நிகிதாவிடம் நடைபெறும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நிகிதா தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தான் எங்கும் செல்லவில்லை என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார் நிகிதா. மதுரை திருமங்கலத்தில் வசித்து வந்த நிகிதா தற்போது கோவையில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது..
இந்த சூழலில் பேராசிரியை நிகிதா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அருகே அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிகிதா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில், நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்ட நிகிதா “ அந்த தம்பியின் இறப்புக்கு வேதனை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் புகார் அளித்த உடன் வீட்டுக்கு வந்துவிட்டேன்.. அதை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது.. யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.. எனது கால் ரெக்கார்டை பார்த்தாலே தெரியும்.. சட்டத்திற்கு முழு ஒத்துழைப்புக்கு கொடுக்க தயாராக உள்ளேன்.. நாங்கள் அப்பாவிகள்..” என்று கூறியிருந்தார்…
Read More : போதை பொருள் வழக்கு.. ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு..