பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது..
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. இந்த போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.. சிறந்த காளையின் உரிமையாளருக்கு ட்ராக்டரும் பரிசாக வழங்கப்படுகிறது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 2-ம் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது..
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர்களுடன் அமர்ந்து ரசித்து பார்வையிட்டார்.. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கண்ணப்பன், எம்.பிக்கள், சு.வெங்கடேசன், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்..
இந்த சூழலில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் காளை வெற்றி பெற்றது.. இந்த போட்டியில் களமிறக்கப்பட்ட அண்ணாமலை காளையை வீரர்கள் சுத்துப்போட்ட நிலையில், காளை அடங்காமல் டஃப் கொடுத்தது.. இறுதியில் இந்த போட்டியில் அண்ணாமலை காளை வெற்றி பெற்றது..



