பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது..
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.. எனினும் சில காளைகளும் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் டஃப் கொடுத்தன..
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகளில் வெற்றி பெற்ற 37 வீரர்கள் இறுதி சுற்றில் பங்கேற்றனர்.. விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்பாயூரணி கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.. பூவந்தி அபிசித்தர் 16 காளைகளை அடக்கி 2-வது இடம் பிடித்தார்.. பாசிங்காபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் 3-வது இடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.. 2-ம் இடம் பிடித்த அபிசித்தருக்கு ட்ராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.. சிறந்த காளைக்கான முதல் பரிசாக காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது..



