சமீபத்தில் ஒரு Google Pixel 6a ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது திடீரென வெடித்து சிதறியதாக ரெடிட்டில் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்..
சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில் ஒரு Google Pixel 6a ஸ்மார்போன் சார்ஜ் செய்யும் போது திடீரென வெடித்து சிதறியதாக ரெடிட்டில் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.. இரவு நேரத்தில் போனை சார்ஜ் செய்து விட்டு தூங்கிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் வெடித்து சிதறிய போன் தனது தலைக்கு அருகில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்..
மேலும் வெடிப்பது போன்ற உரத்த சத்தம் கேட்டதால் தான் தூக்கத்தில் இருந்து எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார். உடனடியா போனில் இருந்து சார்ஜ் கேபிளை எடுத்து தூக்கி வீசிதாகவும் ஆனால் அதற்குள் தனது போர்வை எரிந்துவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார். எனவே நீங்களும் இரவு முழுவதும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் கவனமாக இருங்கள்.. போன் வெடிகுண்டாக மாறும் என்று அவர் கூறியுள்ளார்.. இந்த பதிவு பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல்களை பாதுகாப்பாக சார்ஜ் செய்ய பொதுமக்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய பாதுகாப்பு குறிப்புகள் என்னென்ன?
தவிர்க்க வேண்டிய 5 பொதுவான தவறுகள்:
மென்மையான இடங்களில் சார்ஜ் செய்யாதீர்கள் : தலையணை, மெத்தை, கம்பளி போன்ற மென்மையான இடங்களில் மொபைலை சார்ஜ் செய்தால், வெப்பம் வெளியேற முடியாமல் போய் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
போலி சார்ஜர்கள், தாழ்தர கேபிள்கள் பயன்படுத்தாதீர்கள் :தற்போதைய மொபைல்களுக்கு பாதுகாப்பான மின்னழுத்தம் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் அந்தந்த போன்களின் ஒரிஜினல் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும். போலி சார்ஜர்கள் காரணமாக அதிக மின்சாரம் செல்லும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவும் போன் வெடிக்கலாம்..
தூங்கும் நேரத்தில் தலையருகே வைத்துப் சார்ஜ் செய்யாதீர்கள் : தூங்கும் போது மொபைலை தலையருகில் வைத்து சார்ஜ் செய்தால், வெடிப்பு அல்லது தீ ஏற்படும் போது அது உயிருக்கு ஆபத்தாக முடிவடையலாம்.
வெப்பம் அதிகமாகுதல், பேட்டரி உருக்கல் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்: போனை சார்ஜ் போடும் மொபைல் வெப்பமாக இருப்பதை கவனத்தால், உடனடியாக சார்ஜ் செய்தலை நிறுத்தவும். சில நேரங்களில், பேட்டரி விறைப்பு (swelling) போன்றவையும் ஆபத்தை எச்சரிக்கின்றன.
மொபைலை இரவு முழுவதும் சார்ஜ் செய்யாதீர்கள் : முடிந்தவரை இரவு முழுவதும் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும். இரவு முழுவதும் போனை சார்ஜ் போடுவது மிகப்பெரிய தவறு.. இது பேட்டரியின் ஆயுளையும் குறைக்கலாம்; மேலும் பாதுகாப்பு சிக்கல்களையும் ஏற்படுத்தலாம்.
இந்த தவறுகள் ஏன் ஆபத்தானவை?
இன்றைய மொபைல்களில் Lithium-ion பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இது அதிக சக்தியை சிறிய அளவில் சேமிக்க உதவுகிறது. ஆனால் மிகுந்த வெப்பம், குறைவான தரம், சரியான சார்ஜிங் கட்டுப்பாடு இல்லாமை போன்றவை ஏற்பட்டால் thermal runaway எனப்படும் கட்டுப்பாட்டின்றி வெப்பம் கிளம்பும் நிலை ஏற்பட்டு வெடிப்பு அல்லது தீ பற்றும் வாய்ப்பு அதிகமாகிறது.
சரி, எப்படி சார்ஜ் செய்ய வேண்டும்
கடின மற்றும் ஒழுங்கான மேசை மேல் சார்ஜ் செய்யவும்
உரிமம் பெற்ற சார்ஜர்கள் மற்றும் கேபிள்கள் மட்டுமே பயன்படுத்தவும்
தலையருகில் அல்லது மென்மையான இடங்களில் சார்ஜ் செய்ய வேண்டாம்
போனில் சார்ஜ் இருந்தாலும் மீண்டும் மீண்டு சார்ஜ் செய்வதை விர்க்கவும்
சார்ஜ் முடிந்ததும் உடனடியாக அணைத்து விடவும்
இந்த எச்சரிக்கைகள் சாதாரணமாகத் தோன்றினாலும், கவனக்குறைவாக இருந்தால் அது உயிரிழப்பு வரை செல்லும் அபாயம் உள்ளது. பாதுகாப்பாக இருக்க இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவது நல்லது.
Read More : விவசாயிகள் வங்கி கணக்கிற்கு வரப்போகும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? உடனே சரி பாருங்க..