அலர்ட்!. உங்க போனில் இந்த அளவு ரேடியேஷன் இருந்தால் அதை பயன்படுத்தக்கூடாது!. எப்படி தெரிந்துகொள்வது?.

mobile Radiation 11zon

மொபைல் ஃபோன் இல்லாத உலகத்தை யாராலும் இனி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. உண்மையில் சொல்லப்போனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகமே உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்துள்ள ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் அசாதாரணமான அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


2023ம் ஆண்டில் வெளியான ஆய்வுகளின்படி, உலக மக்கள் தொகையில் 80 % பேரிடம் செல்போன்கள் இருப்பதாக கூறுகின்றன. ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 முறை செல்போனை பார்ப்பதாக சொல்லப்படுகிறது. வானிலை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள, பாடல்களை கேட்க, புகைப்படம் எடுக்க, மெயில் அனுப்ப என ஒவ்வொன்றிற்கும் தனி தனி சாதனங்களை சார்ந்திருந்த நாம் இன்று அனைத்தையும் ஸ்மார்ட் போன் மூலம் செய்யும் நிலைக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.

ஆனால் அந்த மொபைல் ஃபோன்களை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுறுத்தல். பல இடங்களில், மொபைல் ஃபோன்கள் வெடிக்கும் செய்தியைக் கேட்டிருப்போம். இதுதவிர பலருக்கு சம்பந்தமே இல்லாமல் திடீர் தலைவலி, காதுவலி, கண் தொடர்பான பிரச்சனைகள், நரம்பு தொடர்பான பிரச்சனைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்கு இந்த மொபைல் ஃபோன்களும் ஒரு வகையில் காரணமாக அமைகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சு மனிதர்களின் தலைநரம்புகளை சென்று பாதிப்படையச் செய்வதாகக் கூறப்படுகிறது. மொபைல் ஃபோன் மட்டும் இன்றி, இந்த நவீன நாகரீகத்தில் தயாரிக்கப்படும் ப்ளூ டூத் ஹெட், கணினி உள்ளிட்ட பலவற்றில் இந்த கதிர் வீச்சு இருக்கிறது. ஆனால் இந்த கதிர்வீச்சின் அளவை ஒவ்வொரு நாடுகளும் அனுமதித்துள்ள SAR மதிப்புக்குக் கீழ் பயன்படுத்தினால் ஓரளவு பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது.

SAR மதிப்பு என்றால் என்ன? குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதம் அதாவது Specific Absorption Rate என்பது மனித தலை மற்றும் உடலில் ரேடியோ அலைவரிசை (Radio Frequency) டெபாசிட் செய்யும் சக்தியின் அளவீடாகும். மொபைல் போன், ப்ளூ டூத் உள்ளிட்ட வயர்லெஸ் உபகரணங்கள் அனைத்தும் SAR சோதனைக்கு உட்படுத்தப்பட்டே சந்தை படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் மத்திய தொலை தொடர்புத்துறை அனுமதித்துள்ள SAR மதிப்பு 1.6 W/kg ஆகும். இது ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே மாறுபடும். 1.6 W/kg-ம் மேல் SAR மதிப்பு அதிகரிக்கும்போது அந்த மொபைல் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உங்கள் மொபைல் ஃபோனை எடுத்து அதில், *#07# என டைப் செய்யுங்கள். உடனே உங்கள் மொபைல் ஃபோனிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதில், உங்கள் மொபைல் ஃபோனின் SAR மதிப்பு Maximum SAR Level நீங்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்தியதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு Head SAR மற்றும் Body SAR மதிப்பீட்டு, 1.6 W/kg எனக் காண்பிக்கும் இதில் இருந்து கூடுதலாக இருந்தால் அந்த மொபைலை பயன்படுத்தக் கூடாது.

கதிர் வீச்சு உபகரணங்களை எப்படிப் பயன்படுத்தக்கூடாது? மேலும், இரவில் உறங்கும்போது தலையணைக்குக் கீழே மொபைல் ஃபோனை வைத்துக்கொண்டு உறங்குவது, ஃப்ளூ டூத் ஹெட் செட்டை தொடர்ந்து பயன்படுத்துவது, சட்டை பை மற்றும் ஃபேன்ட் பாக்கெட்டில் மொபைல் ஃபோனை நீண்ட நேரம் வைத்திருப்பது.

மடிக் கணினியைத் தொடர்ந்து மடியில் வைத்துக்கொண்டு பயன்படுத்துவது உள்ளிட்ட பல செயல்கள் கதிர் வீச்சின் இயக்கத்தை நமது உடலுக்குள் செலுத்தும். இதனால் உடல் நலன் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்போதே உங்கள் மொபைல் ஃபோனின் SAR மதிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள், பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழுங்கள்.

Readmore: பூமியை விட 4 மடங்கு பெரியது!. 154 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய சூப்பர் எர்த் கண்டுபிடிப்பு!. விஞ்ஞானிகள் அசத்தல்!

KOKILA

Next Post

பெரும் சோகம்... திமுகவின் மூத்த தலைவர் காலமானார்...! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Sat Jul 5 , 2025
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதல் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் […]
DMK 2025

You May Like