அலெர்ட்!. போஸ்ட் ஆபீஸ் SMS மோசடி!. லிங்கை டச் பண்ணா மொத்தமும் போச்சு!. எச்சரிக்கும் PIB!.

இந்தியா போஸ்டில் இருந்து வந்ததாகக் கூறிக்கொள்ளும் ஒரு போலி எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது, இது சந்தேகத்திற்கிடமான இணைப்பு மூலம் பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்குமாறு வலியுறுத்துகிறது. இது ஒரு மோசடி என்பதை PIB (Press Information Bureau) உண்மைச் சரிபார்ப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்தியா போஸ்ட் அத்தகைய செய்திகளை அனுப்புவதில்லை.
PIB, அதன் அதிகாரப்பூர்வ X தளத்தில், இந்திய போஸ்ட் ஆபீஸிலிருந்து உங்களுக்கு ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. அது வேர்ஹவுஸில் இருக்கிறது. நாங்கள் இரண்டு முறை டெலிவரி செய்ய முயற்சித்தோம், ஆனால் முழுமையற்ற முகவரித் தகவல் காரணமாக டெலிவரி செய்ய முடியவில்லை. இன்னும் 48 மணி நேரத்திற்குள் உங்களுடைய முகவரி விவரங்களை indiapost-go-in.one/index என்ற இணைப்பில் அப்டேட் செய்யவும். இல்லை என்றால் அந்தப் பேக்கேஜ் திருப்பி அனுப்பப்படும். புதுப்பிப்பு முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள் நாங்கள் மீண்டும் டெலிவரி செய்வோம் என்பது போன்ற மெசேஜ் வந்தால் எச்சரிக்கையாக இருக்கும் படி கூறி ஒரு போஸ்ட்டை பகிர்ந்து உள்ளது.
முதல் பார்வையில், இது அதிகாரப்பூர்வமாகவும் தோன்றலாம், ஆனால் அது முற்றிலும் போலியானது. வந்திருக்கும் மெசேஜை நம்பி ஒரு நபர், அவர்கள் கொடுத்த இணைப்பை கிளிக் செய்தவுடன் ஹேக்கர்கள் வைரஸ்கள் மற்றும் தீங்கிழைக்கும் சாஃப்ட்வேர்களை, உங்களுடைய டிவைஸில் புகுத்துகிறார்கள். இதன் மூலம் உங்களுடைய தகவல்களும் திருடப்படுகிறது. இதுபோன்ற தீங்கிழைக்கும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று PIB பயனர்களை எச்சரித்துள்ளது.
மேலும் எந்த ஒரு பொருளையும் வழங்குவதற்காக முகவரிகளை அப்டேட் செய்யுமாறு கேட்டு இந்திய அஞ்சல் துறை ஒருபோதும் இது போன்ற செய்திகளை அனுப்பாது என்றும் PIB தெளிவுபடுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள மெயில் ஐடி, செய்தியின் போன் நம்பர் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி அனுப்புனரின் நம்பகத்தன்மையை பயனர்கள் முதலில் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விழிப்புணர்வே, இது போன்ற மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறப்படுகிறது.
Readmore: ஏர்போர்ட் மூர்த்தி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…! சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு…!


