எல்லோரும் மகிழ்ச்சியாகவும், பணப் பற்றாக்குறை இல்லாமல் வாழவும் விரும்புகிறார்கள். ஆனால் சிலர் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் பலன் கிடைப்பதில்லை. வாஸ்து சாஸ்திரத்தின்படி, நாம் செய்யும் சிறிய தவறுகளால், வீட்டில் பணமும் அமைதியும் இருக்காது. நம் வீடுகள் செல்வத்தால் நிரப்பப்பட வேண்டுமென்றால், வாஸ்துவின்படி, சில வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்யக்கூடாது. எந்த வேலைகளை எந்த நேரத்தில் செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்தில் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும். லட்சுமி தேவி வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். என்னென்ன விஷயங்கள் செய்ய கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரிய அஸ்தமனத்தின் போது சாப்பிடக்கூடாது: வாஸ்து சாஸ்திரத்தின்படி , சூரிய அஸ்தமனத்தில் யாரும் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நேரத்தில் கடவுள் வழிபடப்படுகிறார்.
தயிர் தானம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்தின் போது அல்லது அதற்குப் பிறகு தயிர் தானம் செய்யக்கூடாது. இது சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையது. இது செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
தூக்கம்: சூரிய அஸ்தமனத்தில் தூங்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். சூரிய அஸ்தமனத்தில் தூங்குவது ஆரோக்கியத்திலும் செல்வத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
துடைப்பம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்தில் வீட்டில் துடைப்பத்தைப் பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் இந்த நேரத்தில் துடைத்தால், லட்சுமி தேவி வீட்டை விட்டு வெளியேறுவாள் என்று நம்பப்படுகிறது.
வாசலில் உக்கார கூடாது: ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாலை நேரத்தில் வீட்டின் வாசலில் ஆண் / பெண் யாருமே அமரக்கூடாது. சாஸ்திரங்களில், மாலையில் வீட்டின் வாசலில் அமர்வது அசுபமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால் லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது என்பது நம்பிக்கை.