திமுக உடன் கூட்டணி..? 5+ இடங்களை தாங்க.. ராமதாஸ் போடும் புது கணக்கு.. இந்த டிவிஸ்ட் எதிர்பார்க்கலையே..!

stalin vs ramadoss

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்.


இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ள நிலையில் முக்கிய கட்சிகளை தங்கள் வசம் இழுக்க திமுகவும், அதிமுகவும் திட்டம் தீட்டி வருகிறது.

அதேசமயம் திமுக கூட்டணியில் பாமக தலைவர் ராமதாஸ் தலைமையிலான கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்புமணிக்கு எதிராக பாமகவில் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட தன்னுடைய மகள் ஸ்ரீகாந்தியை, 2026 தேர்தலில் தருமபுரியில் களமிறக்க பாமக தலைவர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ராமதாஸ் உத்தரவின்பேரில், திமுகவுடன் கூட்டணி பேச்சை ஜி.கே.மணி தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இணைந்து, ஐந்து MLA-க்கள் வென்றாலே, கட்சியை தன் பக்கம் தக்க வைத்து விடலாம் என்று அவர் கணக்கு போட்டு இருக்கிறாராம்.

Read more: Rasi Palan | வேலை, பணம், ஆரோக்கியம்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும்..? – பிரபல ஜோதிடர் விளக்கம்..

English Summary

Alliance with DMK..? To hold 5+ seats.. Ramadoss is making a new calculation..

Next Post

அடிக்கடி ஜீன்ஸ் அணிபவரா நீங்கள்..? பெண்களுக்கு ஏற்படும் 6 முக்கிய உடல்நலப் பிரச்சனைகள்.. நிபுணர்கள் எச்சரிக்கை!

Fri Oct 31 , 2025
Are jeans so harmful? 6 major health problems for women.. Experts warn!
AA1It9CI

You May Like