யாருடன் கூட்டணி..? ஒரே நேரத்தில் திமுக, அதிமுக உடன் பேச்சுவார்த்தையா? பிரேமலதா காட்டமான பதில்..!

premalatha2

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..


இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.. திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விளக்கம் அளித்துள்ளார்.. திமுக, அதிமுக என 2 கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

இன்று சென்னையில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சர் எ.வ. வேலு ஆகிய 3 பேருமே  தேமுதிக உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சொல்கின்றனர்.. ஆனால் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் இரு கட்சிகளுடனும் பேசுகின்றனர் என்ற தகவலை யார் தருகிறார்கள் என்பது தெரியவில்லை..” என்று காட்டமாக பேசினார்..

தொடர்ந்து பேசிய அவர் “ எங்கள் மாவட்ட செயலாளர்கள், எங்கள் நிர்வாகிகள், எங்கள் கட்சி தொண்டர்கள் யாருடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் இந்த முறை தேமுதிக கூட்டணி அமைக்கும்.. உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.. எங்கள் கட்சி தொண்டர்களே அமைதியாக இருக்கின்றனர்.. பத்திரிகையாளர்கள் மட்டும் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை.. தேமுதிக எங்கள் கட்சி, என்ன முடிவெடுக்க வேண்டும்? எப்போது அறிவிக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் அறிவிப்பேன்..” என்று தெரிவித்தார்.

Read More : கரூரில் அதிமுக நிர்வாகிகளை கூண்டோடு தூக்கிய செந்தில் பாலாஜி..!! அதிர்ச்சியில் ஆடிப்போன இபிஎஸ்..!!

RUPA

Next Post

செங்கோட்டை குண்டுவெடிப்பில் ஜெய்ஷ் இ அமைப்புக்கு தொடர்பு.. ஐ.நா. அறிக்கையில் வெளியான பகீர் தகவல்..!

Thu Feb 12 , 2026
தென் ஆசியாவில் பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 37-வது அறிக்கையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்கு அருகே நடந்த தாக்குதலில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-மொஹம்மது (JeM) பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. ஒரு ஐநா உறுப்பு நாடு, அந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமதுஅமைப்பே பொறுப்பு எனக் கூறியதாக ஐநாவுக்கு தகவல் வழங்கியுள்ளது. இதன் மூலம், டெல்லி […]
delhi blast 1 1762918125 1 1

You May Like