ஈரான் உடனடியாக நிறுத்தவில்லையெனில்; மீண்டும் தாக்குதல் நடத்துவோம்!. டிரம்ப் நேரடி எச்சரிக்கை!

US bombs Irans 3 nuclear sites

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போருக்கு மத்தியில் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.


ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போரில் அமெரிக்காவும் இப்போது இணைந்துள்ளது. ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல் முற்றிலும் வெற்றிகரமானதாக விவரிக்கப்பட்டுள்ளது என அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் தனது அறிக்கையில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம். ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.

அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க இராணுவம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களைத் தாக்கியதை ஈரானிய ஊடகங்களே உறுதிப்படுத்தியுள்ளன. இஸ்லாமிய குடியரசின் இஸ்பஹான், நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதாக அவர்கள் கூறினர். இது தொடர்பாக, வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார், மேலும் அதிகரித்து வரும் போரை விரைவில் நிறுத்துமாறு ஈரானை அச்சுறுத்தினார்.

ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில் மீண்டும் ஒரு தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே யுரேனியம் கையிருப்பு காலியாகிவிட்டதாக ஈரானின் அரசு செய்தி சேனல் கூறியது. இருப்பினும், இதற்கு முன்னர் மார்ச் மாதத்திலேயே அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான பொருட்களை சரியான இடங்களில் வைத்துவிட்டதாக ஈரான் கூறியது, ஏனெனில் இஸ்ரேல் எந்த நேரத்திலும் தங்களைத் தாக்கக்கூடும் என்று அவர்கள் ஏற்கனவே அஞ்சியிருந்தனர்.

Readmore: வீடு கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கும் மானியம் பெறுவது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

KOKILA

Next Post

அலாரம் அடித்த பிறகும் இந்த தவறை செய்கிறீர்களா?. மூளைக்கு பெரும் ஆபத்து!. நிபுணர்கள் எச்சரிக்கை!

Sun Jun 22 , 2025
பெரும்பாலான மக்கள் காலையில் அலாரம் அடித்தவுடன் எழுந்திருக்காமல், ஸ்னூஸ் பட்டனை அழுத்தி இன்னும் சில நிமிடங்கள் தூங்க முயற்சி செய்கிறார்கள். இந்தப் பழக்கம் மிகவும் பொதுவானது, ஆனால் அது உங்கள் உடலையும் மனதையும் பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இதன் விளைவாக, நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள், மேலும் எரிச்சலும் அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பழக்கத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல், தூக்கத்தைப் பற்றி தீவிரமாக சிந்திக்க […]
alarm sleep 11zon

You May Like