Breaking : சிலிண்டர் பிரச்சனை.. ஹோட்டல்களுக்கு புதிய சலுகை.. 1 யூனிட் மின்சாரத்திற்கு ரூ.2 மானியம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

Gas Cylinder Mk Stalin

எல்பிஜி சிலிண்டர் பிரச்சனை குறித்து முதலமச்சர் மு.க ஸ்டால்டின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியங்களின் தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ சிலிண்டர் பிரச்சனை ஏற்பட்ட உடனே தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் படி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் என அனைத்து வகையான உணவகங்களுக்கு எரிவாயு சிலிண்டருக்கு பதில் மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் போது கூடுதல் மின் கட்டணம் வந்தால், சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மின் பயன்பாட்டின் அளவை மீறி உபயோகிக்கும் போது யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் வணிக சிலிண்டர் கட்டுப்பாடுகள் எவ்வளவு நாள் அமலில் இருக்கிறதோ அதுவரை இந்த சலுகைகள் தொடரும். அனைத்து வகை உணவகங்களுக்கும் இது பொருந்தும்.. அதாவது சிலிண்டர் பிரச்சனை உள்ளவரை இந்த சலுகை தொடரும்.. உணவகங்களில் காய்கறிகள் வீணாவதை தடுக்க, உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எல்.பி.ஜி விற்பனை தொடர்பாக கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்கள் மின் அடுப்புகள் உள்ளிட்ட மின்சார உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் கடன் வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் 35% மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1 கோடி வரை கடன் வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

பொதுமான அளவு கையிருப்பு உள்ளது.. தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை.. அதிகாரப்பூர்வ தகவல்..!

Sat Mar 14 , 2026
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த சூழலில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு […]
Petrol Pump 1 1

You May Like