மாநில நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை….!

சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மகாலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஒரு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு இருக்கிறார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவற்றை அமித்ஷா வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து இன்று மதியம் 2 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலமாக வேலூரை அடுத்துள்ள அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு வருகை தரும் அமித்ஷா, அங்கிருந்து கார் மூலமாக கந்தனேரி பொது கூட்ட மேடைக்கு செல்கின்றார். பொதுக்கூட்டம் முடிவடைந்த பிறகு மறுபடியும் கார் மூலமாக அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு சென்று ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு வருகிறார்.

அதன்பின் வேலூரில் இருந்து சென்னைக்கு இரவு 9 மணி அளவில் வருகை தரும் அமித்ஷா, தனி விமான மூலமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Post

இந்தியாவில் நோய் தொற்று சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2450 ஆக குறைந்தது….! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்…..!

Sun Jun 11 , 2023
நாட்டில் புதிதாக 140 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2450 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,891 ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4.49 […]
covid19 1600x900 4

You May Like