திமுகவில் அம்மா விசுவாசி..! நகர்மன்ற தலைவர் முதல் முதலமைச்சர் வரை..! ஓபிஎஸ் கடந்து வந்த அரசியல் பாதை..!

OPS Stalin

அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை..


தேனி மாவட்டம் பெரியகுளத்தை பூர்வீகமாக கொண்டவர் ஓ. பன்னீர்செல்வம்.. சிறுவயது முதலே எம்.ஜி.ஆர் மீது பற்று காரணமாக அதிமுகவில் இணைந்து பணியாற்றினார்.. 1196-ம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற தலைவராக அதிமுக சார்பில் ஓபிஎஸ் தேர்வானார். 2001 முதல் தொடர்ந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக ஓபிஎஸ் இருந்து வருகிறார்.. 2001 மற்றும் 2006 தேர்தல்களில் சொந்த்ட ஊரான பெரியகுளம் தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யபப்ட்டார்.

2011, 2016, 2021 தேர்தல்களில் போடி நாயக்கனூர் தொகுதியில் நின்று ஓபிஎஸ் வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். எனினும் அந்த தொகுதியில் 2-ம் இடத்தை பிடித்தார்..

அதிமுகவில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தார்.. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் ஓபிஎஸ் மாறினார்.. தனக்கு பிரச்சனைகள் வந்த போதெல்லாம் ஓபிஎஸ்-க்கு தான் ஜெயலலிதா முதல்வர் பதவியை வழங்கினார்.

2001-2002, 2014 -2015, 2016-2017 காலக்கட்டங்களில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.. ஜெயலலிதா இருமுறை சிறை சென்ற போது, ஜெயலலித மறைவாஇ அடுத்தும் முதல்வர் பொறுப்பை ஏற்றார் ஓபிஎஸ்.. பின்னர் இபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது 2017-2021 வரை துணை முதலமைச்சராக ஓபிஎஸ் பொறுப்பு வகித்தார்..

ஜெயலலிதா மறைவுக்கு ஓபிஎஸ் துரோகியாகிவிட்டதாக கூறி கட்சியை விட்டு வெளியேற்றி சசிகலா முதல்வராக முயன்றார்.. ஆனால் சசிகலாவை முதல்வராக்க கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து தன்னை ராஜினாமா செய்ய சொன்னதாக கூறி தர்ம யுத்தத்தை தொடங்கினார்.. அந்த காலக்கட்டத்தில் ஓபிஎஸ் மீது பலருக்கும் அனுதாபம் ஏற்பட்டது.. பலரும் அவருக்கு ஆதரவாக திரண்டனர்.. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார்..

அதிமுக இபிஎஸ் அணி – ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.. பிளவுபட்ட அதிமுக பாஜக முயற்சியில், 2017-ம் ஆண்டு ஒன்றாக இணைந்தது.. கட்சிக்கு ஓபிஎஸ் பொறுப்பு, ஆட்சிக்கு இபிஎஸ் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.. இபிஎஸ் முதல்வராக இருந்த நிலையில் துணை முதல்வராகவும் இபிஎஸ் இருந்தார்.. அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இருந்தது..

ஆனால் அதிமுக ஆட்சி முடிந்ததும் இபிஎஸ் – ஓபிஎஸ் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது.. 2021 தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதிலும், தேர்தலுக்கும் பின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதிலும் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது.. இரண்டு பதவிகளையும் இபிஎஸ் பெற்றார்.. 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. ஓபிஎஸ் மீது பாட்டீல் தூக்கி வீசப்பட்டு, அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..

தனது ஆதரவாளர்களுடன் அதிமுக உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் ஓபிஎஸ் இயங்கிவந்தார்.. அதன்பின்னர் எத்தனையோ முறை அதிமுகவில் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் முயற்சித்தார்.. எந்த பதவியும் வேண்டாம் எனவும், அதிமுகவில் இணைத்தால் போதும் என்று கெஞ்சியும் பார்த்தார் ஓபிஎஸ்.. எதற்குமே செவி கொடுக்காத இபிஎஸ், மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்..

மேலும் அதிமுகவுக்கு மீண்டும் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை வலுத்தது.. பின்னர் அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.. அதன்பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று பல முறை ஓபிஎஸ் முயன்றும் அவர் நினைத்தது நடக்கவில்லை..

அந்த வகையில் மீண்டும் அதிமுகவில் இணைய நான் ரெடி என்று ஓபிஎஸ் நேற்று கூறினார்.. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரைக் கைவிட்டுவிட்டனர், மேலும் பாஜகவும் ஒரு காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட அதே முக்கியத்துவத்தை இப்போது வழங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு தேவர் குருபூஜையின் போது செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றாக சந்தித்தனர்.. அப்போது “துரோகி ஈபிஎஸ்-ஐ தோற்கடிப்போம்” என்று கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் சபதம் செய்தனர்.. அதில் செங்கோட்டையன் தற்போது தவெகவுக்கு சென்றுவிட்டார், டி. டி. வி. தினகரன், இப்போது ஈபிஎஸ்-உடன் கைகோர்த்துள்ளார்.

ஓபிஎஸ் உடன் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரும் திமுகவில் இணைந்துவிட்டனர்.. அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்ற நிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார் ஓபிஎஸ்.. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரு கண்கள் எனக் கூறி வந்தவர் தற்போது மு.க. ஸ்டாலினின் நேசக்கரம் பிடித்துள்ளார்.. அண்ணா அறிவாலயத்தில் அடைக்லம் தேடி உள்ளார்..

ஒன்றிய செயலாளரராக தொடங்கி தமிழ்நாட்டின் முதல்வராகி, அதிமுக என்ற மாபெரும் கட்சி தலைமை வகித்தார்.. கடந்த 3 ஆண்டுகளாக அதிமுகவில் இணையலாம் என்ற காத்திருந்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றமே மிஞ்சியது.. அதிமுகவில் இணைவது சாத்தியமில்லை என்ற நிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

RUPA

Next Post

“சர்வாதிகாரி இபிஎஸ் இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது..” திமுகவில் இணைந்த பின் ஓபிஎஸ் பேட்டி.!

Fri Feb 27 , 2026
அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை.. திமுகவில் இணைந்த பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலினுக்கு என் முதல் நன்றியை […]
eps and ops

You May Like