தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது..
அதன்படி, என்.டி.ஏ கூட்டணியில் இதுவரை 3 தொகுதிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. அதன்படி பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கபப்ட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் 3 தனித்தொகுதி, 8 பொதுத்தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அமமுக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
என்.டி.ஏ கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகள் உத்தேச பட்டியல்
சைதாப்பேட்டை
சோளிங்கர்
பூந்தமல்லி
நாங்குநேரி
ஓட்டப்பிடாரம்
பெரியகுளம்
மதுரை மத்தி
தஞ்சை
காரைக்குடி
திருச்சி மேற்கு
மன்னார்குடி
இந்த 11 தொகுதியில் போட்டியிட அமமுக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் எந்தெந்த தொகுதியில் அமமுக போட்டியிடும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : “மக்களை காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” மேற்காசிய போர்.. முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!



