திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையான பராமரிபின்றி இயங்கி வந்த காற்றாஅலை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக் கூடிய சாலையில் சீல நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவத்தின் காற்றாலை இயந்திரம் ஒன்று உள்ளது. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த காற்றாலை இயந்திரம் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக அடியோடு சாய்ந்தது.
காற்றாலை உடைந்து 6 துண்டுகளாக சிதறியதால் அருகே இருந்த மின் கம்பிகள் சேதமடைந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காற்றாலை விழும் போது அருகில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காற்றாலைகளை முறையாக பராமரிக்கப் படாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Read more: உடல் எடையை குறைக்க சிரமப்படுறீங்களா..? இந்த மாற்றங்களை செய்தால் போதும்.. நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!