தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் நிரப்பும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு பல்வேறு மருத்துவ மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கள உதவியாளர் (Field Assistant) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியானது. மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் இருப்பதாக MRB அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பணியிட விவரம்:
பதவியின் பெயர் – கள உதவியாளர்
காலிப்பணியிடங்கள் – 41
ஒதுக்கீடு
- பொதுப் பிரிவு – 9,
- பிசி – 10, பிசி(எம்) – 1,
- எம்பிசி/ டிஎன்சி – 5, எஸ்சி – 13,
- எஸ்டி – 13
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபட்சம் 32 வயது வரை இருக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி: கள உதவியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 1 வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். நல்ல உடல்நலன், கண் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் 20 சதவீதம், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 30 சதவீதம் மற்றும் சான்றிதழ் படிப்பு 50 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 5 கீழ் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? கள உதவியாளர் பதவிக்கு ஆர்வமாக உள்ளவர்கள் அவர்களின் விவரங்களை https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அளித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.12.2025.
Read more: சிக்கன் vs மீன்..!! உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்த உணவு..? எதை எப்போது சாப்பிட வேண்டும்..?



