தேர்வு கிடையாது.. ரூ.1,23,100 சம்பளத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை..! உடனே விண்ணப்பிங்க..

job 7

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 134 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


பணியிட விவரம்:

திட்ட விஞ்ஞானி E – 1

திட்ட விஞ்ஞானி III – 13

திட்ட விஞ்ஞானி II – 29

திட்ட விஞ்ஞானி I – 64

விஞ்ஞானி உதவியாளர் – 25

நிர்வாக உதவியாளர் – 1

வயது வரம்பு:

  • திட்ட விஞ்ஞானி E பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
  • திட்ட விஞ்ஞானி III பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம்.
  • திட்ட விஞ்ஞானி II பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.
  • திட்ட விஞ்ஞானி I பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம்.
  • விஞ்ஞானி உதவியாளர் மற்றும் நிர்வாக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:

திட்ட விஞ்ஞானி – E

  • இயற்பியல், கணிதம், வானிலையியல், வளிமண்டல அறிவியல்,
  • மின்னணுவியல், கருவியியல்,
  • மின்னணுவியல் & தொடர்பியல்
  • இவற்றில் ஏதேனும் ஒன்றில் M.Sc அல்லது B.E/B.Tech தகுதியுடன் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • அதேசமயம் 11 ஆண்டுகள் தொழில்பணி அனுபவமும் அவசியம்.

திட்ட விஞ்ஞானி – பிரிவு (III / II)

  • வானிலையியல், வேளாண் புள்ளியியல், வேளாண் இயற்பியல்,
  • தொலைஉணர்வு & GIS, கணினி அறிவியல்,
  • இயற்பியல், கணிதம், வளிமண்டல அறிவியல்,
  • மின்னணுவியல், கருவியியல், மின்னணுவியல் & தொடர்பியல்
  • இவற்றில் M.Sc அல்லது B.E/B.Tech முடித்திருக்க வேண்டும்.

அனுபவத் தேவைகள்:

  • திட்ட விஞ்ஞானி III : 7 ஆண்டுகள் அனுபவம்
  • திட்ட விஞ்ஞானி II : 3 ஆண்டுகள் அனுபவம்

விஞ்ஞானி உதவியாளர்: இயற்பியலில் B.Sc அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாடு, எலக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் B.E பட்டப்படிப்பு.

நிர்வாக உதவியாளர்: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பு, கூடுதலாக கணினி திறன் அவசியம்.

சம்பளம்:

  • திட்ட விஞ்ஞானி E பதவிக்கு ரூ.1,23,100 வழங்கப்படும்.
  • திட்ட விஞ்ஞானி III பதவிக்கு ரூ.78,000 வழங்கப்படும்.
  • திட்ட விஞ்ஞானி II பதவிக்கு ரூ.67,000 வழங்கப்படும்.
  • திட்ட விஞ்ஞானி I பதவிக்கு ரூ.56,000 வழங்கப்படும்.
  • விஞ்ஞானி உதவியாளர் பதவிக்கு ரூ.29,200 வழங்கப்படும்.
  • நிர்வாக உதவியாளர் பதவிக்கு ரூ.29,200 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். பிறந்த தேதி, அனுபவம், கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் https://mausam.imd.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: டிசம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்பாரா? ணை முதல்வர் யார் என்பது சஸ்பென்ஸ்!

English Summary

An employment notification has been issued for vacant posts at the Indian Meteorological Department.

Next Post

தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு.. இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி..

Wed Nov 19 , 2025
ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி […]
puthiyathalaimurai 2024 03 b36f000c 4144 4c99 8019 2d65ed6ad568 5

You May Like