தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கீழ், கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட மொத்தம் 5 காலிப்பணியிடங்கள், இனசுழற்சி முறையில் நிரப்பப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணியிட விவரம்:
ஈப்பு ஓட்டுநர் – 4
இரவு காவலர் – 1
மொத்தம் – 5
ஊதியம்:
- ஓட்டுநர் பதவிக்கு – ரூ.19,500 – 71,900
- காவலர் பதவிக்கு – ரூ.15,700 – 58,100
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 42 வயது வரை இருக்கலாம்.
தகுதிகள்:
- ஓட்டுநர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதுமானது.
- மேலும், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரும மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- காவலர் பதவிக்கு கல்வித்தகுதி அவசியமில்லை. தமிழ் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணிக்கான விண்ணப்பத்தை https://cuddalore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நிரப்பி புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இறுதியில் உள்ள உறுதிமொழியை படித்து கையொப்பமிட வேண்டும். இதனுடன் தேவையான சில ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை சேர்ந்து, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.
தேவையான ஆவணம்:
- கல்வித்தகுதி சான்றிதழ்
- பள்ளி மாற்று சான்றிதழ்
- வகுப்பு சான்றிதழ்
- முன்னுரிமை கோருபவர் என்றால் அதற்கான சான்றிதழ்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- கைம்பெண், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான ஆவணத்தை இணைக்கலாம்.
Read more: 3 வயது சிறுவனின் உயிரை பறித்த பலூன்.. கதறி அழுத தாய்..! பெரும் சோகம்..



