மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 25,487 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 25487 கான்ஸ்டபிள்
ஆண் விண்ணப்பதாரர்களுக்கான படை வாரியான காலியிட விவரங்கள்:
- BSF – 524 பதவிகள்
- CISF – 13135 பதவிகள்
- CRPF – 5366 பதவிகள்
- SSB – 1764 பதவிகள்
- ITBP – 1099 பதவிகள்
- AR – 1556 பதவிகள்
- SSF – 23 பதவிகள்
பெண் விண்ணப்பதாரர்களுக்கான படை வாரியான காலியிட விவரங்கள்:
- BSF – 92 பதவிகள்
- CISF – 1460 பதவிகள்
- CRPF – 124 பதவிகள்
- SSB – 0
- ITBP – 194 பதவிகள்
- AR – 150 பதவிகள்
- SSF – 0
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18-23 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02-01-2003 முதல் 01-01-2008 வரை பிறந்திருக்க வேண்டும்.
வயது தளர்வு:
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: +5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு: +3 ஆண்டுகள்
சம்பளம் எவ்வளவு? தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-3 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இதன்படி மாதச் சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும். இதுதவிர மத்திய அரசின் இதர சலுகைகளும் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
- கணினி அடிப்படையிலான தேர்வு
- உடல் திறன் தேர்வு (PET)/ உடல் தர தேர்வு (PST),
- மருத்துவ தேர்வு/ ஆவண சரிபார்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி.
எப்படி விண்ணப்பிப்பது? அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in ல் சென்று விண்ணப்பிக்க வேண்டும். புதிய இணையதளத்தில் ‘One Time Registration’ (OTR) செய்வது கட்டாயம். பழைய இணையதள கணக்கு செல்லாது.
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2025
தேர்வு தேதி: பிப்ரவரி – ஏப்ரல், 2026.
Read more: அது என்ன 5-4-3-2-1 நடைபயிற்சி..? இவ்வளவு ஈசியா உடல் எடையை குறைக்க முடியுமா..?



