ரெப்கோ வங்கியில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

job2

ரெப்கோ வங்கியில் உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:

வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ கிளார்க் – 30

வயது வரம்பு: ரெப்கோ வங்கியில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 30.06.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதார்களுக்கு கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • கணினி திறன் தெரிந்திருக்க வேண்டும்.
  • திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 10 +2 என்ற அடிப்படையில் இல்லாமல் டிகிரி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி கிடையாது.

சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னையில் பணி நியமனம் பெரும் நபர்களுக்கு கொடுப்பனவுகள் சேர்த்து மாதம் ரூ.42,347 வழங்கப்படும். வருடத்திற்கு தோராயமாக ரூ.8.80 லட்சம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நடைமுறை: விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இப்பணிக்கு நேர்காணல் கிடையாது. மேலும், ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்தப்படும்.

பாடத்திட்டம்:

  • மொத்த கேள்விகள் – 200
  • மொத்த மதிப்பெண்கள் – 200

பாட வாரியாக கேள்விகள்:

  • Reasoning – 40 கேள்விகள்
  • Quantitative Aptitude (கணிதம்) – 40 கேள்விகள்
  • English Language – 40 கேள்விகள்
  • General Knowledge (பொது அறிவு) – 40 கேள்விகள்

தேர்வு நேரம்: 120 நிமிடம். அதாவது, ஒவ்வொரு பாடத்திலும் 40 கேள்விகள் வரும். மொத்தம் 200 கேள்விகளை 2 மணி நேரத்துக்குள் எழுத வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Repcobank இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.900
  • எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் – ரூ.500

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி – ஆகஸ்ட் 18, 2025

விண்ணப்பிக்க கடைசி தேதி – செப்டம்பர் 8, 2025

ஆன்லைன் தேர்வு – நவம்பர் 2025 (திட்டமிட்டுள்ள தேதி)

அட்மிட் கார்டு தேர்விற்கு 7–10 நாட்களுக்கு முன் இணையதளத்தில் வெளியாகும்.

Read more: இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவர்.. சான்றிதழில் பாலினத்தை மாற்ற மறுத்த கல்வி நிறுவனம்..! – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

English Summary

An employment notification has been issued to fill the positions of Customer Service Officer at Repco Bank.

Next Post

வெறும் 2 நிமிட நடைப்பயிற்சி செய்வதால் இந்த 10 நோய்கள் ஒருபோதும் வராது!. ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் அட்வைஸ்!

Wed Aug 20 , 2025
தினசரி நடைப்பயிற்சி ஆரோக்கிய நன்மைகள்: நடைப்பயிற்சி என்பது ஆரோக்கியமாக இருக்க எளிதான வழி மட்டுமல்ல, வாழ்க்கை முறைக்கும் நல்லது என்று கருதப்படுகிறது. ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை நிபுணர் சோனியா நாரங்கின் கூற்றுப்படி, 2 நிமிட நடைப்பயிற்சி கூட உடலுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். தினசரி நடைப்பயிற்சி ஆரோக்கிய நன்மைகள்: தினமும் நடப்பது கலோரிகளை எரிப்பதற்கு மட்டுமல்லாமல், ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும், பல ஆபத்தான நோய்களைத் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் […]
Walking Routine

You May Like