ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை.. விளையாட்டு கோட்டாவில் 25 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க..

job 1 1

ரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF – Integral Coach Factory) யில், 2025 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு கோட்டா (Sports Quota) அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள் – 25

காலிப்பணியிடங்களின் விவரம்

நிலை 1 ரயில்வே பதவிகள் – 15
நிலை 2 – டெக்னீஷியன் கிரேடு III, ஜூனியர் கிளார்க் – 8
நிலை 5 – சீனியர் கிளார்க் – 2

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 25 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.2001 முதல் 01.01.2008 தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு வழங்கப்படாது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கால்பந்து, கபடி, கிரிக்கெட், ஹாக்கி, பூப்பந்து, தடகளம், கைப்பந்து, டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய விளையாட்டு பிரிவு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி:

நிலை–1 பதவிகள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ (ITI) தேர்ச்சி அல்லது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.

நிலை–2 டெக்னீஷியன் பதவி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்புடன் தொழிற்பயிற்சி அல்லது ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

நிலை–2 ஜூனியர் கிளார்க் பதவி: 12-ம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம்.

நிலை–5 சீனியர் கிளார்க் பதவி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும்.

தட்டச்சு திறன் கட்டாயம்: ஜூனியர் கிளார்க் மற்றும் சீனியர் கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் தட்டச்சு திறன் தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்குள் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு அந்தந்த நிலைக்கான சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

சான்றிதழ் சரிபார்ப்பு: முதற்கட்டமாக, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்துள்ள கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெறுவோர் மட்டுமே விளையாட்டு திறன் சோதனைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

விளையாட்டு திறன் சோதனை: விளையாட்டு கோட்டாவின் கீழ் விண்ணப்பித்துள்ள வீரர்களின் விளையாட்டு திறன்கள் நேரடியாக சோதிக்கப்படும்.

மதிப்பெண் கணக்கீடு: திறன் சோதனையில் பெற்ற மதிப்பெண்கள், விண்ணப்பதாரர்களின் விளையாட்டு சாதனைகள், கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

பதவி ஒதுக்கீடு: தேர்வர்கள் பெற்ற இறுதி மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு உரிய பதவிகள் ஒதுக்கப்படும்.

மருத்துவ பரிசோதனை & பணி நியமனம்: இறுதியாக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.மருத்துவ பரிசோதனையில் தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2026.

Read more: ஹை டோஸ் நிமெசுலைடு மாத்திரைகளுக்கு உடனடி தடை விதித்த மத்திய அரசு..! என்ன காரணம்? நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

English Summary

An employment notification has been issued to fill vacant posts based on sports quota at the Chennai Integrated Railway Coach Factory.

Next Post

வெள்ளி விலை ஏன் தாறுமாறாக உயர்கிறது? எதிர்காலத்தில் அதன் விலை எவ்வளவு உயரும்? ஷாக் தகவல்..!

Wed Dec 31 , 2025
வெள்ளி ஒரு வேதியியல் தனிமம். இது ஒரு மென்மையான, வெள்ளி போன்ற வெள்ளை நிறம் கொண்ட, பளபளப்பான இடைநிலை உலோகம் ஆகும். இது மற்ற எந்த உலோகத்தையும் விட அதிக மின் கடத்துத்திறன் மற்றும் வெப்பக் கடத்துத்திறனைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமியின் மேலோட்டில் தூய தனிமமாகவும், தங்கம் மற்றும் அர்ஜென்டைட் போன்ற தாதுக்களில் மற்ற உலோகங்களுடன் சேர்ந்தும் காணப்படுகிறது. பெரும்பாலான வெள்ளி, தாமிரம், தங்கம், ஈயம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றைச் […]
Silver 2025

You May Like