ஒரு கண் ஸ்கேனில் இதய ஆபத்தையும் உடலின் முதுமை வேகத்தையும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..!

eye scan

ஒரு சாதாரண கண் பரிசோதனை, உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது என்பதையும், உங்கள் உடல் எவ்வளவு வேகமாக முதுமை அடைகிறது என்பதையும் வெளிப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? கனடாவில் நடைபெற்ற புதிய ஆய்வு அதையே சுட்டிக்காட்டுகிறது.


கண்களில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களை (retinal blood vessels) பரிசோதிப்பதன் மூலம், உடலின் இரத்தச் சுழற்சி நிலை மற்றும் உயிரியல் முதுமை (biological ageing) குறித்து அறியலாம் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.. அதுவும் எந்த வலி இல்லாத, முறையில்.

மெக்மாஸ்டர் பல்கலைக்கழக மருத்துவத் துறையின் இணை பேராசிரியர் மேரி பிகெயர் (Marie Pigeyre) இதுகுறித்து பேசிய போது “ ரெட்டினா ஸ்கேன், மரபணு தகவல்கள் மற்றும் ரத்தச் சோதனைப் பரிமாணங்களை இணைப்பதன் மூலம், முதுமை எவ்வாறு இரத்த நாள மண்டலத்தை பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கண் என்பது உடலின் இரத்தச் சுழற்சியை ஆக்கிரமிக்காத முறையில் காண ஒரு தனித்துவமான ஜன்னல். இந்தச் சிறிய இரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் உடலின் முழுமையான நிலையை பிரதிபலிக்கின்றன.” என்று தெரிவித்தார்..

இந்த ஆய்வில் 74,000-க்கும் மேற்பட்ட நபர்களின் தரவுகள் — கண் ஸ்கேன்கள், மரபணு தகவல்கள் மற்றும் இரத்தப் பரிசோதனை முடிவுகள் — அனைத்தும் இணைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், கண்களில் குறைந்த கிளைகள் கொண்ட, எளிய வடிவிலான இரத்தக் குழாய்கள் உள்ள நபர்கள் இதய நோய்க்கு அதிக ஆபத்தானவர்களாகவும், மேலும் உயிரியல் முதுமையின் ஆரம்ப அறிகுறிகள் (அதிக அழற்சி, குறைந்த ஆயுட்காலம் போன்றவை) கொண்டவர்களாகவும் இருந்தது தெரியவந்தது.

இப்போது இதய நோய், பக்கவாதம் அல்லது நினைவாற்றல் குறைபாடு போன்ற வயது சார்ந்த நோய்களை கண்டறிய பல்வேறு சோதனைகள் அவசியமாகின்றன.
ஆனால் எதிர்காலத்தில், ஒரு எளிய ரெட்டினா ஸ்கேன் மூலம் இதய ஆரோக்கியம் மற்றும் முதுமை நிலையை விரைவாகவும் எளிதாகவும் அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பிகெயர் பேசிய போது: “இந்த முடிவுகள் உற்சாகமளிப்பவை என்றாலும், இதை வழக்கமான ஆரோக்கிய பரிசோதனையாக மாற்ற இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை.”

முதுமை மற்றும் இதய ஆபத்தின் பின்னுள்ள புரதங்கள்

ஆய்வுக் குழு, MMP12 மற்றும் IgG-Fc receptor IIb என்ற இரண்டு புரதங்களை கண்டறிந்துள்ளது. இவை இரத்த நாள்களின் முதுமை மற்றும் அழற்சி (inflammation) ஏற்படுத்தும் செயல்பாடுகளில் பங்கு வகிக்கக்கூடும். “இந்தப் புரதங்கள், இரத்த நாள்களின் முதுமையை தாமதப்படுத்தவும், இதய நோய் அபாயத்தை குறைக்கவும், ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் உதவும் மருந்துகளுக்கான முக்கிய இலக்குகளாக இருக்கலாம்.” என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது.

ஆய்வின் முக்கியத்துவம்

ஒரு விரைவான, வலி இல்லாத கண் ஸ்கேன் மூலம் மருத்துவர்கள், இதயம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்ள முடியும் என்பதை இந்த அய்வு காட்டுகிறது.. மேலும் ஆராய்ச்சியும் மருத்துவ சோதனைகளும் நடைபெறுமானால், ரெட்டினா ஸ்கேன் எதிர்காலத்தில் இதய நோய் மற்றும் வயது சார்ந்த பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியும் எளிய தடுப்பு கருவியாக மாறும்.

கண் உண்மையிலேயே உடலின் ஜன்னல்” என்பதை இந்த ஆய்வு மீண்டும் நிரூபித்துள்ளது.. அறிவியல் முன்னேறும் போது, எதிர்காலத்தில் ஒரு சாதாரண பார்வைச் சோதனை உங்கள் பார்வை மட்டுமல்லாமல் உங்கள் இதயம், ரத்த நாள்கள், மேலும் உங்கள் உடல் எவ்வளவு வேகமாக முதுமை அடைகிறது என்பதையும் வெளிப்படுத்தக்கூடும்.

Read More : இந்த 4 உணவுப் பழக்கங்களை மாற்றினால் போதும்.. உங்களுக்கு இதய நோயே வராது!

RUPA

Next Post

கரூர் கூட்ட நெரிசல்: புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் மனு வாபஸ்.. தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்..!

Mon Oct 27 , 2025
Karur stampede: Bussy Anand bail plea withdrawn.. Chennai High Court dismisses it..!
bussy anad 1

You May Like