இன்ஸ்டாவில் மலர்ந்த கள்ளக்காதல்..!! போலீஸ்காரருடன் ஓட்டம் பிடித்த திருமணமான பெண்..!! 2-வது கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Sex 2025 3

கர்நாடக மாநிலம் பெங்களூரு, சந்திரா லேஅவுட் பகுதியில், ரீல்ஸ் மோகத்தால் திருமணமான பெண் ஒருவர், மற்றொரு திருமணமான போலீஸ்காரருடன் கள்ளக்காதல் கொண்டு, நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


சந்திரா லேஅவுட்டில் வசிக்கும் மோனிகா (35) என்பவர், முதல் கணவரை பிரிந்து, இரண்டு மகன்களுடன் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மோனிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த பெங்களூரை சேர்ந்த போலீஸ்காரர் ராகவேந்திரா என்பவர் மோனிகாவுக்கு விருப்பம் தெரிவித்து, ஃபாலோ ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார்.

இரண்டாவது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலும், மோனிகா ராகவேந்திராவின் ரெக்வஸ்ட்டை ஏற்றுக்கொண்டதுடன், தனது செல்போன் எண்ணையும் அவரிடம் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்த நிலையில், இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ராகவேந்திராவுக்கும் மனைவி, ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதல் ஜோடியான மோனிகாவும் ராகவேந்திராவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மோனிகா ராகவேந்திராவை வீட்டிற்கே வரவழைத்தும் உல்லாசம் அனுபவித்துள்ளார். இருவரும் ஜோடியாக பல ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இந்த கள்ளக்காதல் வலுத்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோனிகா, தன்னுடைய வீட்டில் இருந்த 160 கிராம் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு, போலீஸ்காரர் ராகவேந்திராவுடன் ஓட்டம் பிடித்துள்ளார். தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இது குறித்து அறிந்த மோனிகாவின் இரண்டாவது கணவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தொடங்கிய இந்த சம்பவம், பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : OYO-வில் ரூம் போட்டு விடிய விடிய உல்லாசம்..!! திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி..!! அடுத்து நடந்த பயங்கரம்

CHELLA

Next Post

16 வயது சிறுமியை நைசாக பேசி அழைத்து குடும்பம் நடத்திய 2 குழந்தைகளின் தந்தை..! இன்ஸ்டா பழக்கத்தால் வந்த வினை..

Sun Dec 14 , 2025
Man arrested for marrying 16-year-old girl
insta love

You May Like