சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!! நடுரோட்டில் திக் திக் நிமிடங்கள்..!! தந்தை கண்முன்னே காருக்குள் வைத்து காதலியை..!! பரபரப்பு

Marriage 2025

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் அஜய் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவி நந்தினி (21) ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே, நந்தினி வழக்கம் போல் நேற்று திருச்செங்கோடு கல்லூரியில் இருந்து நாமக்கல்லுக்கு வந்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, அஜய் தனது உறவினர்களுடன் காரில் காத்துக் கொண்டிருந்தார். நந்தினி காரில் ஏறும்போது, அங்கு வந்த அவரது தந்தை தண்டபாணி, மகள் காதலனுடன் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அப்போது, அஜய் மற்றும் அவரது உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, காருக்குள் சென்ற அஜய், தான் வைத்திருந்த தாலியை நந்தினி கழுத்தில் கட்டியுள்ளார். மேலும், இருவரும் மோதிரங்களையும் மாற்றிக்கொண்டனர். கண் முன்னே மகள் திருமணம் செய்துகொண்டதைக் கண்டு ஆத்திரமடைந்த தண்டபாணி மற்றும் அவரது உறவினர்கள், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அப்போது, அஜய் உள்ளிட்டோரை தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், அஜய், நந்தினி உள்ளிட்ட 5 பேரையும் மீட்டு நாமக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, காவல் ஆய்வாளர் கபிலன் விசாரணை நடத்தினார். நந்தினி, “அஜய்யை விருப்பத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, இரு தரப்பினரையும் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Read More : பெரும் சோகம்..!! முன்னாள் முதல்வர் டி.டி.லாபாங் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

CHELLA

Next Post

ஜாக்கிரதை! நீங்களும் புல்லட் காபி குடிக்கிறீங்களா? இந்த கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!

Sat Sep 13 , 2025
நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும்… சிலர் கருப்பு காபியை விரும்புகிறார்கள்.. சிலர் பால் காபி குடிக்கிறார்கள். ஆனால் இப்போது காபி உலகில் ஒரு புதிய வகை பிரபலமாகி வருகிறது. அதுதான் புல்லட் காபி. பிரபலங்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இந்த காபி பற்றி பேசுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இந்த புல்லட் காபி என்றால் என்ன? இது நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும்? […]
Bullet Coffee Side effects

You May Like