தமிழ்நாட்டில் விபத்துக்கள், குடும்ப பிரச்சனை, தற்கொலை, உள்ளிட்ட காரணங்களால் பெற்றோரை இழந்து அதிக குழந்தைகள் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அன்பு கரங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தில் தகுதி உள்ள குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் வரை மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும். பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் பராமரிப்பில் இல்லாத குழந்தைகள் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சமூக நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் 3 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகையுடன் குழந்தைகளின் அனைத்து விதமான கல்விச் செலவுகளையும் ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அன்பு கரங்கள் திட்டத்திற்கு தகுதியானவர்கள்:
- பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள்.
- பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் குழந்தையைப் பராமரிக்க முடியாத சூழலில் இருப்பவர்கள்.
- பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பவர்கள்.
- பெற்றோரில் ஒருவர் சிறையில் இருப்பவர்கள்.
- பெற்றோரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்.
Read more: ரூ.90,000 சம்பளம்.. பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை..!! உடனே விண்ணப்பிங்க..!



