அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தான் பாமக தலைவர்…! தேர்தல் ஆணையம் அதிரடி…!

ramadoss anbumani

பாமக-வின் தலைவராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தான் தொடர்வார் என்று அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அளித்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.


பாமக-வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பினரும் தங்களுக்கு சாதகமானவர்களை நிர்வாகிகளாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டனர். இதன் ஒரு பகுதியாக, கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை ராமதாஸ் நியமித்தார்.

மேலும், கட்சியை கைப்பற்ற இரு தரப்பினரும் சில மாதங்களுக்கு முன்பு பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினர். இதன் தொடர்ச்சியாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் அணுகினர். இதில், அன்புமணி தலைமையிலான பாமக-வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதோடு 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்வார். பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை அணுகி மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பினர் பெற்றனர்.

இதனால், கடும் கோபம் அடைந்த ராமதாஸ் பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை என்றும், அவரது பதவி காலம் ஏற்கெனவே முடிந்து விட்டது எனவும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால், தேர்தல் ஆணையம் ராமதாஸ் தரப்பு மனுவை நிராகரித்தது.

அன்புமணி தரப்பு போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, அதன் அடிப்படையிலேயே அவருக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையமும் அன்புமணியுடன் சேர்ந்து, அவருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் செய்திருப்பது ஜனநாயக படுகொலை. இதனை கண்டித்து டெல்லியில் தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

2026 ஜனவரி முதல் AC அல்லாத பெட்டிகளில் போர்வை, தலையணை வசதி...! தெற்கு ரயில்வே அறிவிப்பு...!

Sat Nov 29 , 2025
10 எக்ஸ்பிரஸ் இரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கும் திட்டம் கொண்டு வர தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது‌. இந்திய இரயில்வே துறையில் பொதுவாக AC பெட்டியில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Non AC Sleeper) பயணிகளுக்கு இதுவரை அதுபோன்ற வசதி இல்லை. இந்த நிலையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் […]
train pillow 2025

You May Like