பாமக பொதுக்குழுவில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.. கட்சி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது.. ராமதாஸ் இல்லாமல் முதல் முறையாக நடக்கும் கூட்டம் இதுவாகும்.. பொதுக்குழு கூட்ட மேடையில் அன்புமணி உட்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தது.. ஆனால் அவர் வராததால் அந்த இருக்கை காலியாக இருந்தது.. மேலும் நிறுவனர் ராமதாஸுக்கும் தனி இருக்கை போடப்பட்டிருந்தது.. ராமதாஸ் வழியில் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம், அதற்குள் எல்லோரும் ஒன்றுபடுவோம் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது..
இந்த பொதுக்குழுவில் பாமக உட்கட்சி தேர்தலை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவராக அன்புமணி தொடர்வார். பாமக பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்ற தீர்மானமும் நிறைவெற்றப்பட்டது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அறிவிக்காவிட்டால் அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது..
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதை விடுதலை நாளாக அறிவிக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் இந்த பொதுக்குழுவில் சமூக நீதி கடமைகளை நிறைவேற்ற மறுப்பதாக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது..