புதுச்சேரி அருகே தமிழகத்தின் பட்டானூரிலுள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில், பட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் (17.08.2025) அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 4,000 பேர் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் சேலம் எம்.எல்.ஏ. அருள், முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலர் அன்பழகன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை, ராமதாஸ் தரப்பு நியமித்தது. இந்த குழு, அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதன் விவரங்களை கட்சி நிறுவனர் ராமதாசிடம் அறிக்கையாகச் சமர்ப்பித்தது.
அன்புமணிக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டுகள்
- கடந்த ஆண்டு டிசம்பர் 22, புதுச்சேரி அருகே நடைபெற்ற பொதுக்குழுவில் மைக்கை தூக்கி எறிந்து ராமதாசுக்கு எதிராக பேசியது.
- பா.ம.க. தலைமை அலுவலகத்தை பனையூரில் தனியாகத் தொடங்கி, அதற்கான மொபைல் எண்களை பகிர்ந்து குழப்பம் ஏற்படுத்தியது.
- தைலாபுரம் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், சிலரை தடுக்க முயன்றது; அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க ஆதரவு திரட்டியதாக குற்றச்சாட்டு.
- ராமதாசை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்தது; தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
- தலைமையின் அனுமதியின்றி தனிப்பட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தியது; அங்கு ராமதாசை அவமதிக்கும் விதமாகச் செயல்பட்டது.
- “உரிமை மீட்பு நடைபயணம்” எனும் பேரணி நடத்தி, தலைமையை சவால் செய்தது.
- நிர்வாகிகளிடம் பதவி, பணம் வழங்குவதாக கூறி பனையூருக்கு அழைத்துச் சென்றது.
- மக்கள் தொலைக்காட்சி, பசுமை தாயகம் உள்ளிட்ட அமைப்புகளை அபகரிக்க முயன்றது.
- சென்னை தேனாம்பேட்டை அலுவலகத்தை ராமதாசுக்கு தெரியாமல் தியாகராய நகர் மாற்றியது.
- பொதுவெளியில் “நிறுவனருடன் 40 தடவை பேசினேன்” என பொய்யான தகவல் பரப்பியது.
இந்த 16 குற்றசாட்டுகளுக்கும் அன்புமணி பதிலளிக்க ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அன்புமணி தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் அன்புமணியை கட்சியி இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கு குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்று நேரத்தில் கூடுகிறது.
Read more: குட்நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. நகைக் கடைகளில் குவியும் மக்கள்..