உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த விவசாயியான சின்கு நிஷாத் என்பவர், நிலம் கையகப்படுத்தப்பட்டதால் கிடைத்த ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையை, மகள் நீலத்தின் (19) திருமணத்திற்காக வங்கியில் சேமித்து வைத்திருந்தார். இதைப் பயன்படுத்த விரும்பிய மகன் ராம் ஆசிஷ் (32), பணத்தைக் கேட்டு தந்தையுடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.
நிஷாத் அந்தப் பணம் நீலத்தின் திருமணத்திற்காக மட்டுமே என்று கூறியதால், அண்ணன் ராம் ஆசிஷுக்குத் தன் தங்கை மீது கடுமையான வெறுப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஒரு நாள் வீட்டில் தங்கை நீலம் மட்டும் தனியாக இருந்தபோது, ராம் ஆசிஷ் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
நீலம் இருந்தால் தானே அவரது திருமணத்திற்காக பணம் செலவு செய்யப்படும் என்று நினைத்து, தங்கையை கொலை செய்யத் துணிந்தார். இதையடுத்து, அவர் நீலத்தை சரமாரியாகத் தாக்கி, கால்களை முறித்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 70 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று கரும்புத் தோட்டத்தில் வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
மறுநாள், கரும்புத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற விவசாயிகள், ரத்தக்கறையுடன் இருந்த மூட்டையைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ராம் ஆசிஷ்தான் தனது தங்கையை கொலை செய்து உடலை கொண்டு வந்து வீசியது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : தமிழக விவசாயிகளே..!! இனி உங்களுக்கு ரூ.2,000 கிடைக்காது..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



