அஞ்சல் சேவைக்கான உரிம மையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
அஞ்சல் சேவையில் ஈடுபடுவதற்காக உரிமம் பெற்ற நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆர்வமுடைய, தகுதியுடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அஞ்சல்துறையின் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், பணவிடை (எம்ஓ) ஆகியவற்றை பதிவு செய்தல் மற்றும் பல்வேறு சிறுவகை சேவைகள் உட்பட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
நிறுவனங்களை நடத்துவதற்கு உகந்த இடங்களை வைத்துள்ள இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் சேவை நடவடிக்கைகளின் அடிப்படை களை அறிந்த தேவையான உள்கட்டமைப்புக்கு முதலீடு செய்ய தயாராக உள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் துறை அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்.
இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை அருகில் உள்ள கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://utilities.cept.gov.in/DOP/ViewUploads.aspx?uid=10- ன் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 31.07.2025 ஆகும் .
Read more: 10 வயது சிறுமியை, வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை..! அ.மலை வெளியிட்ட வீடியோ பதிவு