உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை ரயில் பாதையை கடக்க முயன்றபோது 4 பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சம்பவ இடத்துக்குச் அதிகாரிகள் உடனடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்முனை வேகத்தில் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், SDRF மற்றும் NDRF குழுக்களை விரைவாக மீட்பு பணிகளில் ஈடுபடுத்தி, காயமடைந்தோருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். காயமடைந்தோர் விரைவில் நலம்பெற வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்துத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பயங்கரமான ரயில் விபத்து ஏற்பட்டது. கோர்பா பயணிகள் ரயில் (Korba Passenger Train) மற்றும் சரக்கு ரயில் (Freight Train) நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர்.. இந்த விபத்து பிலாஸ்பூர்–கட்னி (Bilaspur–Katni) ரயில் பாதையில் உள்ள லால் க்ஹாந்த் (Lal Khand) பகுதியில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : “இந்தியா இன்னும் வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடையவில்லை; ஆனால் 2047க்குள்”…. நிர்மலா சீதாராமன் பேச்சு!



