’லியோ’ படத்தில் கமிட்டான மேலும் ஒரு நடிகை..!! என்ன கதாபாத்திரம் தெரியுமா..? ரசிகர்கள் குஷி..!!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும், நேற்று முன்தினம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 37-வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார். ஏற்கனவே இப்படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


’மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ’லியா’ படத்தில் சிறு வேடத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

CHELLA

Next Post

ICICI வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் இதோ.‌‌..

Fri Mar 17 , 2023
ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Regional Head Sales – Retail மற்றும் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 3 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். […]
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!! இனி இதற்கும் கட்டணம்..!! இன்று முதல் அமல்..!!

You May Like