தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக இடையே நிலவி வந்த இருமுனைப் போட்டி, தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அக்கட்சியில் இணைந்தது முதல், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தனது புதிய பாசறைக்கு இழுக்கும் பணிகளில் அவர் பம்பரமாகச் சுழன்று வருகிறார்.
பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறி வந்தார்.. அதே போல் சமீபத்தில் ஈரோட்டில் பேசிய விஜய்யும் அதிமுகவில் இருந்து மேலும் பல தலைவர்கள் இணைவார்கள் எனவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்..
அந்த வகையில் தற்போது மற்றொரு அதிமுக தலைவர் தவெகவில் இணைந்துள்ளார்.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவான மரியமுல் ஆசியா செங்கோட்டையன் முன்னிலையில் தன்னை செங்கோட்டையன் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். பொங்கலுக்கு முன் இன்னும் பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



