திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதே ரயில் நிலையத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருப்பது பொதுமக்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் நான்கு சிறுவர்கள் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளார்கள். அப்போது அதே ரயிலில் பயணித்த வடமாநில தொழிலாளர் சிராஜ் மீது கத்தி வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளார்கள். இதனால் சிராஜ் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிராஜை திருத்தணி ரயில் நிலையத்தில் இறக்கி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற நான்கு பேரும் அவரை பட்டா கத்தி மற்றும் கட்டையால் தாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலாகி நாட்டையே உலுக்கி உள்ளது. கை,கால் தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிராஜை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதே ரயில் நிலையத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருப்பது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுப்புடவை வியாபாரம் செய்யும் ஜமால் என்பவர் திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஜமாலை மிக கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை காப்பாற்ற முயன்ற போது அங்கிருந்த பொது மக்களையும் அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து இழுத்துச் சென்று அவரை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த வந்த போலீசார் ஜமாலை மீட்டு இளைஞர்களை கைது செய்தனர்.
ஜமால் தாக்கப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பொதுமக்கள் தங்கள் உயிரை தாங்களாகவே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை சுராஜ், ஜமால்கள் தாக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more: தினமும் நைட்டு லேட்டா தூங்குறீங்களா? அப்ப ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..!



