வங்கதேசத்தில் சமீபத்தில் இளைஞர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி கொல்லப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில் பத்திரிகை அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன..
இந்த சூழலில் உஸ்மான் சுட்டுக் கொல்லபப்ட்ட சில நாட்களுக்குப் பிறகு, வங்கதேசத்தில் இன்று மற்றொரு இளைஞர் தலைவர் சுடப்பட்டார். அந்த இளைஞர் தலைவர், வங்கதேச தேசிய குடிமக்கள் கட்சியின் குல்னா பிரிவுத் தலைவர் மொட்டாலேப் சிக்தார் என அடையாளம் காணப்பட்டார். சிக்தாரின் தலையின் இடது பக்கத்தில் குண்டு காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிக்தார் தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) தலைவர் ஆவார். அவர் அதன் குல்னா பிரிவுத் தலைவராகவும், NCP ஸ்ராமிக் சக்தியின் மத்திய அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
“காலை 11:45 மணியளவில் சமூக விரோதிகள் அவரைத் தலையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் ஆபத்தான நிலையில் குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று சோனாதங்கா மாதிரி காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி (விசாரணை) அனிமேஷ் மண்டலை மேற்கோள் காட்டி அந்த செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
மொட்டாலேப் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டதாக அந்த அதிகாரி கூறினார். குண்டு அவரது காதின் ஒரு பக்கமாக நுழைந்து, தோலைத் துளைத்து, மறுபக்கம் வழியாக வெளியேறியது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Read More : 16 பேர் பலி.. பயணிகள் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. இந்தோனேசியாவில் சோகம்..!



