திருப்பூர் வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக – கேரள எல்லையில் சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த 30-ம் தேதி வாகன சோதனை மேற்கொண்டனர்.. அப்போது அந்த வழியாக மூணாறு நோக்கி சென்ற கேரள அரசு பேருந்திலும் சோதனை நடத்தினார். அந்த பேருந்தில், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த பழங்குடியின தொழிலாளி மாரிமுத்து என்பவரிடம் சிறுத்தை பல் இருந்தது தெரியவந்தது.. மாரிமுத்து தற்போது கேரளாவின் மறையூரில் வசித்து வந்ததும் தெரியவந்தது..
இதையடுத்து மாரிமுத்துவை கேரள அதிகாரிகள், தமிழக வனத்துறையிடம் ஒப்படத்தைனர்.. உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு மாரிமுத்து அழைத்து சென்ற வனத்துறையினர் அவரிடம் அங்கு விசாரணை மேற்கொண்டார்கள்..
இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 4.15 மணியளவில் மாரிமுத்து வனத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஆனால் மாரிமுத்துவின் சாவில் மர்மம் இருக்கிறது என்றும், அவரை வனத்துறையின் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. மேலும் போராட்டத்திலும் ஈடுபட்ட நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
இதையடுத்து மாஜிஸ்திரேட் முன்னிலை பிரேத பரிசோதனை நடைபெற்றது.. அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது..
எனினும் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உறவினர்கள் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.. இதை தொடர்ந்து நேற்றிரவு மாரிமுத்துவின் பெற்றுக்கொண்ட உறவினர்கள் அடக்கம் செய்தனர்..
இந்த நிலையில், வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. திருப்பூர் மாவட்ட வன அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..
Read More : “உலகிலேயே தந்தையை வேவு பார்த்த ஒரே மகன்..” அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்…