மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது /துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது /துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் பலர் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று வரை பெற்றுக் கொள்ளமால் உள்ளனர். அத்தகைய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து (தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு /தற்காலிக மதிப்பெண் பட்டியல்) 31.10.2025 வரை கீழ்க்குறிப்பிட்டுள்ள அலுவலக முகவரியில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் உரிய அரசாணையின்படி கழிவுத்தாட்களாக கருதி அழிக்கப்படும் என்பதால், தற்போது வழங்கப்படும் இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக முகவரி: அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் இரண்டாம் தளம், ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி-636 705. தொலைபேசி-04342-233812. என்ற முகவரியில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



