கர்நாடகாவில் மீண்டும் ஒரு 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. சிறு குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை அனைத்து வயதை சேர்ந்த பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. கர்நாடகாவில் மீண்டும் ஒரு 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பிதரில் உள்ள ஒரு பள்ளியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அவரின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இது குறித்து அடையாளம் தெரியாத ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜூலை 23 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது..
சிறுமியின் தந்தை காலையில் பள்ளியில் இறக்கிவிட்டு, பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் அழைத்துச் சென்றுள்ளார்.. ஆனால் வீடு திரும்பியபோது, அவள் உடை மாற்றும்போது அவளுடைய அந்தரங்கப் பகுதியிலிருந்து இரத்தம் வழிவதை அச்சிறுமியின் தாயார் கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து விசாரித்த போது தான் சிறுமி தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.. தற்போது இந்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
சிறுமியின் வாக்குமூலத்தை போலீசார் இன்னும் பதிவு செய்யவில்லை, மேலும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த மாதம், கர்நாடகாவின் மண்டியாவில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 21 வயது நபர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பிரவீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த அவரது பெற்றோர் மண்டியாவில் உள்ள ஒரு பிளைவுட் தொழிற்சாலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை செய்து வருகின்றனர், குற்றம் சாட்டப்பட்டவரும் அங்கு ஒரு ஊழியராக இருந்தார்.
தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை குற்றம் சாட்டப்பட்டவர் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மற்றக் குழந்தைகள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர், அவர்கள் குழந்தையைத் தேடிச் சென்ற போது தான் சிறுமி அந்த நபருடன் இருப்பதை பார்த்தனர்.. இதையடுத்து அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
Read More : அண்ணன், தம்பி ஓட ஓட வெட்டிக் கொலை.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு..!! அறந்தாங்கியில் பயங்கரம்